உடையார் எனப்படுவது ஊக்கம்

0
771

மனிதன் தன்னிடம் உள்ளதைக் கொண்டு பெருமை கொள்வது வழக்கம். உடைமை என்பது அபரிமிதமாகப் போகும்போது அவர்களு’கு அத்தகைய உடைமை அவனை உயர்த்திக் காட்சிப் படுத்துவதாகிறது. இதனை இன்று ஸ்டேட்டஸ் சிம்பல் என்பர். இவர் இரண்டு தொழிற்சாலைகளு’குச் சொந்தக்காரர் என்கின்றபோது அந்த இரண்டு தொழிற்சாலைகளும் இவரது சமுதாய அந்தஸ்தை உயர்த்திக் காட்டும் உடைமைப் பொருளாகிறது. இதனை வள்ளுவர் வரவேற்கிறார். காரணம் அவர் கொண்ட உடைமை என்பது இந்த நாடு கண்ட நன்மை தரும் செல்வமாகும். இத்தகைய தனியுடைமையே சமுதாய சோசலிசமாக இன்றைய இந்தியாவை வாழ வைக்கிறது. அவனது தொழிற்சாலைகளைப் பார்த்திடும் மனிதன் அதனை ஏற்படுத்திட அந்த மா மனிதனின் மனதில் உருவாக்கிய வரைபடத்தினை பார்த்தாரில்லை.

அந்த மாபெரும் அடையாளத்தை தந்திட்ட அன்னாரது மனது கொண்ட ஊக்கத்தினை யாரும் அறிந்தார் இல்லை. உண்மையின் அவரது உள்ளத்து ஊக்கமும் இடையறா முயற்சியின் உருவாக்கமே அந்த இரண்டு தொழிற்சாலைகளாகும். இன்று அவனது தொழிற்சாலைகளை’ கைப்பற்றிட துடித்திடும் தொழிலாளர்களை நாம் அறிவோம். அது போன்றே அந்த மனிதரின் செல்வங்களை கொள்ளையிடத் துடித்திடும் மனித குலத்தினை நாம் அறிவோம். ஆனால் அவர் கொண்ட அந்த நேர்மையான உள்ளத்து ஊக்கத்தினை நாம் கொள்ளையிட்டாவது நாடு காணும் நல்ல செயலுக்கு தலைவனாக மாறும் மனிதனைத் தேடத்தான் வேண்டியுள்ளது. தனம் தரும் செல்வம் தரும் அன்பர் என்பர்க்கே கணம் தரும் அபிராமி கடைக்கண்களே என்றவர்கள் இறைவனிடம் கையேந்தும் கடையராக இந்த மனித குலத்தை மாற்றியபோது வள்ளுவர் அத்தகைய அடிமைக் கூட்டத்தை மீட்டெடுக்க குறள் சமைத்தார். உள்ளம் உடைமை உடைமை என்றார். இத்தகைய உள்ளத்தினை யாரிடமும் கையேந்தி நின்று பெறப்படுவதல்ல என்றார். இது போன்றே மன்னர்களின் அல்லது மந்திரிகளின் காலில் விழுந்து பெறப்படும் பொருளும் அல்ல என்றார்.

எத்தகைய அறிதலைப் பாருங்கள். இந்த அறிதலைப் பெறுவதற்கும் தன்னம்பிக்கை மிக்க சுதந்திர சிந்தனைத் தேவையாகிறது. அடிமைத்தனத்தை உற்பத்தி செய்கின்ற மூளையினைப் பெற்றவர்களுக்கு இத்தகைய அறிதல் பெற்றிட இயற்றப்பட்டதே திருக்குறளாகும். எனவேதான் உள்ளம் உடையது உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும் (திகு 592). இங்கே தேடும் பொருள் எல்லாம் பொருள் என்பதை அறிவோம். பணம் நாம் தேடும் பொருள். கடவுள் நாம் தேடும் பொருள். சுகம் நாம் தேடும் பொருள். எனவேதான் இந்த தேடும் பொருள்கள் நிலையற்றவை என்று நாம் அறிந்திட வேண்டும் என்பார் பெரியோர். ஆனால் உள்ளம் கொண்ட செயலாக்கம் தரும் ஊக்கம் இருக்கிறதே அது என்றும் நம்மை சும்மா இரு சொல்லறு என்று அறிவுறுத்தக் கூடாது என்பார் வள்ளுவர். எனவேதான் உள்ளம் உடையது உடைமை என்றவர், உடையர் எனப்படுவர் ஊக்கம் அஃதிலார் உடையது உடையரோ மற்று (திகு 591) என்றார். ஊக்கம் உயர்வைத் தரும். உயர்வோம். வள்ளுவம் அறிவோம்.

விளக்கம் – பாவலர் சீனி.பழநி, பி ஏ ,
அண்ணாநகர் தமிழ்ப் பேரவைத் துணைச் செயலாளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here