உலகக்கோப்பையை வடிவமைத்து இந்திய அணியை ஊக்குவித்த வேலம்மாள் பள்ளி மாணவர்களின் யோகா நிகழ்வு

0
505

உலக யோகா தினத்தை முன்னிட்டு முகப்பேர் வேலம்மாள் பள்ளி பெருமையுடன் நடத்திய மாபெரும் யோகா நிகழ்வு ஜுன் 19, 2019 அன்று இனிதே நடந்தேறியது. இதனை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யோகா பயிற்சியில் சுமார் 5001 மாணவர்கள் பங்கேற்று பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். மேலும் இந்நிகழ்வில் ஆரோக்கிய வாழ்வினைப்பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. உலகக் கோப்பையை வெல்லும் வகையில் இந்திய அணியை ஊக்குவிக்கும் பொருட்டு 2019 உலகக் கோப்பையின் மாதிரி வடிவத்தை மனித உருவங்களாகச் செய்து பாராட்டினர் மாணவர்கள்.

சர்வதேச சாம்பியன்களின் பங்கேற்புகள் பார்வையாளர்களைக் கலகலப்பாக்கின. பவ்வேறு துறைகளிலும் சாதனை படைத்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இது மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் அவர்களை ஊக்கமளிக்கும் விதத்திலும் அமைந்திருந்தது. நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here