வள்ளுவரது வாக்கு இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த உலகை குறிப்பாக தமிழ் மண்ணை வளம்படுத்தும் வாக்கு. அவர் வாழ்ந்த காலத்தில் இந்த தமிழ் மன்னை தமிழன் ஆண்டான். தமிழர் சிந்தனை ஆட்சி செய்தது. அப்படிப்பட்ட ஆட்சியில் வாழ்ந்த மக்கள் தன் மீதும் தனது உழைப்பின் மீதும் நம்பிக்கைக் கொண்டு வாழ்ந்தனர். ஆட்சி பீடம் அமர்ந்த மன்னனும் மக்களை தமது உயிராகப் போற்றினர். மக்களிடம் தனது மானம் போய்விட்டது என்று தண்டனை முறை சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வதில்லை. ம’கள் தமது கருத்து’களை கூறினால் இன்முகத்தோடு கேட்டனர் மன்னர். அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தாலும் தண்டிப்பதற்கு பதிலாக அறிவுறுத்தலில் ஈடுபட்டனர். மாறாக அவதூறு வழக்குப் போட்டு சிறைக்கு அனுப்ப வேண்டும் என்ற சிறு மதியாளர்கள் அல்ல அக்காலத்து நாடாளும் மன்னவர்கள்.
இடிப்பரா இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இல்லாயினும் கெடும் என்பது வள்ளுவரது குறள். புலவர்கள் நல்ல குடிபடையாக சாதாரண மக்களின் பிரதிநிதியாக மன்னனிடம் உரையாடினர். மன்னனை இடித்தும் போற்றியும் மக்களின் மனதை எடுத்துக் காட்டினர். இதற்கு ஒரு உதாரணமாக உள்ளதுதான் புறநானூற்றுப் பாடல் எண் 186. பாடல் இதோ & நெல்லும் உயிரன்றே நீரும் உயிர் அன்றே & மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் & அதனால் யான் உயிர் என்பது அறிகை & வேல்மிகு தாணை வேந்தர்’கு கடனே. எத்துனை எளிமையான வரிகள் பாருங்கள். இப்பாடல் கூறுவது அரசே என்னை உயிரோடு வாழ வைப்பது இந்நாட்டில் விளையும் நெல்லும் நீரும் அன்று என்கிறான் புலவன். அரசன் என்பவன் மக்களுக்கு உயிர் ஆகும். எனவே மன்னனை முதலாக உயிராகவும் மக்களை உடலாகவும் கொள்க என்கிறான்.
அதாவது உயிர் உடலை தண்டித்து வருத்திக் கொள்ளாது என்ற நியதியை உணர வேண்டும் என்கிறார். இப்போது அரசன் யோசிக்கிறான் தான் உடல் என்பதை மன்னனும் மறுத்திட இயலாது. ஆனாலும் அவனுக்கு உயிர் இந்த மக்களும் அவர்களது நல வாழ்வும் என்பதை அறிகிறான். யாரை யார் குறை கூறுவது ? யாரை யார் தண்டிப்பது ? இன்றைய அரசியல் பீடத்தில் அமர்ந்திருப்போர் இப்படிப்பட்ட தமிழனின் சிந்தனையை அறிவார்களா ? என்ற கேள்வியை அன்றே புலவர்கள் எழுப்பி உள்ளனர். அரியாசனத்தில் அமர்வதற்கும் அமர்ந்த பின்னே ஐந்தாண்டுகளில் நாற்காலியை தக்க வைத்துக் கொள்வதற்கும் மக்களை மடையர்களாக நினைத்து நடந்து கொள்ளும் ஆட்சியாளரைப் பார்த்து வள்ளுவர் கூறுவது என்ன என்றால் எண்பதத்தான் ஓரா முறை செய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும் (திகு 548) என்பதாகும்.
எண்பதத்தான் என்பதற்கு பொருள் காட்சிக்கு எளிமையான அரசன் என்பதாகும். அதாவது காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் (திகு 386) என்ற குறள் படித்தோருக்கு எண்பதத்தான் என்ற சொல்லு’கு பொருள் விளங்கும். இன்னொரு பொருள் எளிதில் மன்னனை நேரில் சென்று காண முடியும் என்பது. அதாவது மன்னன் அரண்மனையில் அவனது ஆசனத்தில் இந்த நேரத்தில் சென்றால் நேரில் பார்த்து தமது குறைகளை சொல்லலாம் என்ற நிலையைக் காப்பாற்றுவது. அதாவது மக்கள் எளிதில் அடைய முடியாத ஒரு மலையின் உச்சியில் போய் அந்த மன்னன் காலம் கழித்தால் அரைப்பட்டினி கிடக்கும் சாதாரண ஏழை மனிதன் தனது மன்னனைத் தேடி அந்த மலை உச்சிக்குச் செல்ல இயலாதல்லவா ? ஆனால் அரசன் என்பவன் தன்னை யாரும் குறை கூறக் கூடாது என்று அன்று கூறினான் இல்லை.
அப்படிக் குறை கூறியவன் மீது அவதூறு வழக்குப்போடும் கொடுங்குணமும் அவன் கொண்டிருந்தது இல்லை என்பதுதான் புற நானூற்றுப் பாடல் வரிகள் காட்டுவது. வள்ளுவரும் அத்தகைய மன்னனை செவிகைப்ப சொல் பொறுக்கும் பண்புடை வேந்தன் (திகு 389) என்பார். அவ்வாறின்றி அதிகார வெறியில் தன்னிலை கெட்டு திரியும் மன்னரைப் பார்த்துதான் அவர்கள் தண் பதத்தான் தானே கெடும் (திகு 548) என்றார். அவர்கள் கெடுவது தின்னம். இருப்பினும் அவர்களது ஆட்சியில் மக்களும் அல்லவா வாடிப் போகிறார்கள். வாட்டுவது முறையா ? என்பது வள்ளுவரது கேள்வி.
விளக்கம் – பாவலர் சீனி.பழநி, பி ஏ ,
அண்ணாநகர் தமிழ்ப் பேரவைத் துணைச் செயலாளர்.