ஏரியல் மற்றும் ஹலோ இங்கிலீஷ் செயலி இணைந்துபாலின பேதத்தை தவிர்க்க பிரச்சாரம்

0
897

ஏரியல், செயலி மூலம் ஆங்கிலம் கற்பிக்கும் ஹலோ இங்கிலீஷ் நிறுவனத்துடன் இணைந்து செயலி மூலம் கற்பவர்களுக்கு வாழ்க்கைக்கு அவசியமான திறமைகளை கற்றுத்தரவும் இதன் மூலம் இந்திய குடும்பங்களில் நிலவும் பாலின பேதத்தை தவிர்க்கவும் முயற்சி செய்துள்ளது. இதற்காக ஏரியல் நிறுவனம் சமீபகாலமாக புதிய பிரசாரமாக Sons#ShareTheLoad  எனும் வாசகத்தை தனது டிடர்ஜென்ட் பிராண்ட் வாயிலாக மேற்கொண்டுள்ளது.

மாணவர்கள் மத்தியில் துணி துவைப்பதும்,  சமைப்பதும் பெண்களுக்கான வேலை மட்டுமல்ல என்றபுரிதலை உணர்த்திவருகிறது. அத்துடன் ஒருங்கிணைந்து கற்பதன் பலனையும் விளக்குகிறது. இதற்காக ஹலோ இங்கிலீஷ் செயலி மூலம் மகன்களுக்கு எப்படி கற்பிப்பது மற்றும் எதிர்கால படிப்பு குறித்து சரியான வழிகாட்டுதலை அளிக்கிறது. மாணவர்களுக்கு கல்வியை போதிக்கும் அதேசமயம் அவர்களிடம் வாழ்வியல் மதிப்புகளை உணர்த்துவதே #ShareTheLoad-ன் முக்கிய நோக்கமாகும்.

ஹலோ இங்கிலீஷ் செயலி மற்றும் ஏரியல் ஆகியன இணைந்து பாலின பேதத்தை தவிர்க்கும் பிரசாரத்தை தென்னிந்திய நடிகை நிக்கிகல்ராணி மூலமாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. ஹலோ இங்கிலீஷ் செயலியானது இளம் மாணவர்களுக்கு மட்டுமல்ல இது இல்லத்தரசிகளுக்கும்,  தாய்மார்களுக்கும், இளம் தொழில் முறையினருக்கும்மிகவும் உபயோகமானது. இந்த செயலியின் கற்பித்தல் பாணியின் மூலம் புதிய முறையிலான கற்பித்தல் முறையை பின்பற்றுகிறது. இந்த கற்பித்தல் முறை மூலம் இந்திய வீடுகளில் பாலின பேதத்தை முற்றிலுமாக போக்குவதே நோக்கமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here