கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை

0
826

வள்ளுவர் கண்ணோட்டம் என்ற ஒரு பகுதியை தமது குறட்பாக்களால் காட்சிப்படுத்துகிறார். இதன் பொருள் என்ன என்பார்க்கு புலவர் குழந்தை அவர்கள் அருட் குணத்தால் பழக்கமுடையார் சொல்லை மறு’க முடியாமல் இரக்கங்காட்டுதல் என்பார். அதாவது மனிதன் மற்றவர்களது தவறு கண்டு அவர்களைத் தண்டித்திடாமல் அன்பும் கருணையும் கொண்டவனாக வாழ்தலை இந்த விளக்கம் தெரிவிக்கிறது. இப்படிப்பட்ட இர’க குணம் யாரிடம் இருக்க வேண்டும் என்பார்’கு வள்ளுவரது பதில் அரசியலாளர்கள் கருணை உடையவர்களாக இருந்திட வேண்டும் என்பாதக உள்ளது. எனக்கு மானம் போய்விட்டது என்று நீதி மன்றத்தில் வழக்கு தொடரும் குணம் தனது தாழ்ந்த சுய மதிப்பீட்டைக் காட்டுகிறது. அத்தகையோரது நெஞ்சத்தில் அன்பும் கருணையும் குடி கொண்டிட இடம் இல்லை என்பது வள்ளுவரது அறிதலாகும். எனவேதான் நாடாளும் மன்னவர்களுக்கு அரசியலைப் பேசும் ஒரு இயலை பொருள் அதிகாரத்தில் சேர்த்தார். அதில் கருணை மனம் கொண்ட ஒரு செயலை ஒரு காரிகையாக உருவகிக்கிறாள்.

அந்தக் காரிகை அன்பும் கருணையும் நற்குணமும் நல்ல சிந்தையும் கொண்ட உருவினள். இப்படி ஒரு பெண் இருந்தால் அவளது முகம் எத்தனை அழகியதாக இருக்கும் என்பதை வள்ளுவர் கோடிட்டு காட்டுகிறார். எனவே அவளை கழி பெருங் காரிகை என்கிறாள். அதாவது ஒரு பெண்ணின் உள்ளத்தில் இத்தகைய பெருங்குணங்கள் அனைத்தும் துளிர் கொள்ளும் பொழுது அவளது முகம் எக்காலத்தும் தனது வனப்பை இழந்திடாது. அதற்கு மாறான கொடுங்குணங்களை தத்தெடுத்துக் கொள்ளும் பெண்ணின் முகம் எத்தனை கோரமாகக் காணப்படும் என்பதை நாம் அறிவோம். எனவே இந்த உலகம் அழகாக தருமமும் கருணையும் கொண்டிருப்பதற்கு காரணம் கருணை என்ற அழகிய பெண் உள்ளதால்தான் என்பார்.

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையால் உண்டு இவ்வுலகு (திகு 571) என்பது அவரது வாக்கு. இதில் உண்மையால் என்பதற்கு உள் & மையால் (உண்மையால்) என்றும் உள்ளதால் என்றும் மாறி பொருள் தரும். எனவேதான் கண்ணிற்கு அணிகலம் கண்யோட்டம் அஃதின்றேல் புண் என்று உணரப்படும் (திகு 575) என்றார். உள்ளத்தில் உள்ள கருணை உனது கண்கள் வழியே வெளிப்படுவதை இங்கு காட்சிப்படுத்துகிறார். கருணையில்லாத உள்ளம் எத்தகைய தீமைகளை தாங்கி நிற்கும் என்பதை கண்ணோடு ஒப்பிட்டு விளக்குகிறார். கருணையற்ற கண் பார்வை தரும் கண்ணல்ல அது தாங்கொனா துன்பம் தரும் புண் என்கிறார். அத்தகைய புண்ணினை சுமந்த உள்ளம் வேண்டாம். மனம் திருந்துக என்கிறார். வள்ளுவம் அறிவோம்.

விளக்கம் – பாவலர் சீனி.பழநி, பி ஏ ,

அண்ணாநகர் தமிழ்ப் பேரவைத் துணைச் செயலாளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here