ட்ரீம் 11’ ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடரை உங்கள் வீடுகளில் இருந்தே மிகவும் வசதியான முறையில் கண்டுகளியுங்கள்!

0
278

• இந்த ஐபிஎல் தொடர் சூழலை மகிழ்ச்சியாகவும், வேடிக்கையாகவும், சுவாரஸ்யமாகவும் மாற்ற சில குறிப்புகள்

10 ஆண்டுகளுக்கும் மேலாக, ‘ட்ரீம் 11’ ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியர்களுக்கு ஒரு நிலையான பொழுதுபோக்கு ஆதாரமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் இந்தத் தொடருக்கான ஆர்வம் தனித்துவமாக வளர்ந்து வருகிறது, மேலும் பார்வையாளர்கள் அடுத்து வரும் சீசனுக்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். பல சிக்கல்கள் மற்றும் விவாதங்களுக்குப் பிறகு, ‘ட்ரீம் 11’ ஐபிஎல்-லின் 13-வது சீசன் இப்போது இந்த மாதத்தில் தொடங்குகிறது. இந்த லீக் செப்டம்பர் 19-ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கி நடைபெறுகிறது..

ரசிகர்கள் மைதானத்தின் உற்சாகத்தையும் ஆற்றலையும் அதிர்வலைகளையும் இந்த ஆண்டு இழக்க நேரிட்டுள்ளது. இந்த அனுபவத்தை சுவாரஸ்யமாக மாற்ற நீங்கள் வீட்டில் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இங்கே தரப்படுகின்றன.

தொலைக்காட்சி அலைவரிசைகளை ஹெச்.டி. சேனல்களாக மேம்படுத்தவும்: ‘ட்ரீம் 11’ ஐபிஎல் 2020 சீசனை ரசிப்பதற்கான மிக முக்கியமான குறிப்பு என்னவென்றால், நீங்கள் ஏற்கனவே ஹெச்டி-க்கு மாறவில்லை என்றால், உங்கள் தொலைக்காட்சியில் உயர் வரையறை (ஹெச்டி) சேனல்களுக்கு மாற வேண்டும். ஹெச்டி உங்களுக்கு மேம்பட்ட தெளிவு, கூர்மை மற்றும் சிறந்த கிராபிக்ஸ் எனப்படும் வரைகலை ஆகியவற்றைக் கொடுக்கும். இது ஒட்டுமொத்த பார்வை அனுபவத்தை வளமாகவும் வசதியாகவும் மாற்றும். மைதானத்தில் இருக்க முடியாத நிலை இருந்தாலும்கூட ஹெச்டி சேனலுடன் கூடிய படத்தின் தரம் உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் நட்சத்திரங்களுடன் நீங்கள் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்: நீங்கள் ஐபிஎல் லீக் போட்டிகளை ரசிக்கும்போது ஆரோக்கியமான தின்பண்டங்களை எடுத்துக் கொள்ளுங்கள். கட்டுடலைப் பாதுக்க்கக்கூடிய ஆரோக்கியம் தரக்கூடிய சுகாதாரமான உணவை உண்ணுங்கள்.

உடல் செயல்பாடு: வீட்டில் மைதானத்தின் உணர்வையும் அதிர்வையும் தக்க வைத்துக் கொள்ள, உங்களுக்கு பிடித்த வீரர் 4 அல்லது 6 ரன் அடிக்கும் போது உற்சாகத்தை வெளிப்படுத்த எழுந்து நில்லுங்கள். இடைவேளையின் போது எழுந்து சுற்றி இருக்கும் இடங்களில் நடக்கவும், ஒரு விக்கெட் விழும்போது உற்சாகமாகக் குதிக்கவும். இது போட்டி முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக இருந்து கண்டுகளிக்க உதவும்.

குடும்பத்துடனான நேரம்: குடும்பத்துடன் ஒவ்வொரு போட்டியையும் பார்த்து மகிழுங்கள். சூழலை வேடிக்கையானதாக மாற்ற, உங்கள் உடன்பிறந்தவருக்கு விருப்பமான அணிக்கு எதிரான அணிக்கு உங்கள் ஆதரவைக் கொடுத்து வேடிக்கை செய்யலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, குடும்பத்தினர் ஒன்றாக சேர்ந்திருந்து உற்சாகமாக இணைந்து இருக்கலாம்.

நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் மெய்நிகர் சந்திப்பு: கடந்த சில மாதங்களாக நீங்கள் உங்கள் நண்பர்களையும் சக ஊழியர்களையும் நேரில் சந்தித்திருக்க மாட்டீர்கள். ஆனால் அவர்களுடன் மெய்நிகர் முறையில் இணைந்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டு ‘ட்ரீம் 11’ இந்தியன் பிரீமியர் லீக் 2020-ஐ உற்சாகமாக அனுபவிப்பதற்கு இதுவே சரியான வாய்ப்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here