தமிழ்இந்தியர் சேவை என்கிற பெயரில்சமூக சேவை செய்து கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளியும் விளையாட்டு வீரருமான V.Y.வினோத்குமார் அவர்களின் சிறு தொகுப்பு

0
671

V.Y. வினோத்குமார் B.com என்கிற நான் சென்னை பம்மலில் வசிக்கிறேன் என்னைப் பற்றி சில மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் சிறிய எழுத்தாளர் சமூக வேலை இதில் எல்லாம் ஈடுபாடு கொண்டவன்
மூன்று வருடம் முன்பு நான் உருவாக்கிய தமிழ்இந்தியர் சேவை என்கிற பெயர் தமிழ் உணர்வும் தேசப்பற்றும் இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது அதில் நானும் 4 மாற்றுத்திறனாளி நண்பர்களும் உள்ளார்கள் தமிழ்இந்திய சேவை என்கிற என் தலைமையில் உள்ள அணியோடு 3 வருடமாக பல்வேறு மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்காக உதவும் நோக்கத்தோடு வேலைவாய்ப்பு கல்வி உதவி மருத்துவ உதவி தொழில் பயிற்சி கவுன்சிலிங் போன்றவற்றை தகவல்களையும் உதவிகளும் என் அணி செய்தது.

இந்த 2002 ஆம் ஆண்டு நோய்த்தொற்று உள்ள இந்த காலகட்டத்தில் மருத்துவர்கள் காவல்துறையினர் தூய்மைப் பணியாளர்கள் பத்திரிக்கையாளர்கள் தொண்டு நிறுவனங்கள் பல்வேறு துறைசார்ந்த உதவியாளர்கள் அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவும்
நாம் ஏதாவது செய்வோம் என்று மார்ச் இறுதி தமிழ்இந்தியர் சேவை முதல்தொடக்கம்.

1) சென்னை பம்மல் பகுதியில் என் சொந்த செலவில் வறுமையில் உள்ள 10 குடும்பங்களுக்கு உதவி செய்தேன்.

2) இரண்டாவது கட்டம் அரசு உதவி என்னை அழைத்து ஐந்து முறைக்கு மேல் தொடர்புகொண்டு 40க்கும் மேற்பட்டோர் முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் மளிகை பொருட்கள் உதவி பெற்றுத் தந்திருக்கிறேன்.

3) மூன்றாவது கட்டும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் yein udaan founded by Vedika அவர்களிடம் உதவி கேட்டேன் அவர்கள் மூலம் 40 குடும்பங்களுக்கு உதவி பெற்று தர முடிந்தது.

4) நான்காம் கட்டம் சென்னை முழுவதும் மேற்கொண்ட முயற்சிகளில் திருவொற்றியூர் மணலி கேகே நகர் கிண்டி ஆவடி பூந்தமல்லி பம்மல் தாம்பரம் வண்டலூர் செங்கல்பட்டு மதுராந்தகம் போன்ற பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக முதியோர்களுக்காக உதவும் வகையில் தொண்டு நிறுவனங்கள் மாவட்ட ஆட்சியர்கள் தாசில்தார்கள் போன்றவர்களிடமிருந்து உதவி கேட்டு பெற்றுத் தர முடிந்தது.

5) ஐந்தாம் கட்டம் பிற மாவட்டங்களில் என்னை தொடர்பு கொண்டார்கள் என் அணி எடுத்துக்கொண்ட முயற்சிகள்
பூமிகா பவுண்டேஷன் அமர்சேவ சங்கம் இரண்டு தொண்டு நிறுவனங்களும் தமிழ்இந்தியர் சேவைக்கு ஆதரவாக இருந்தது
மற்றவர்கள் மாவட்ட ஆட்சியர்கள் தாசில்தார்கள் நண்பர்கள் அணி போன்ற முயற்சிகளால் *தென்காசி வேலூர் ராணிப்பேட்டை மதுரை திண்டுக்கல் திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு போன்ற இடங்கள் எல்லாம் என் அணிக்கு கைகொடுத்தது தோல்விகளும் பல இடங்களில் பெற்றது.

6) இதுவரை தமிழ்இந்தியர் சேவை மூலம் 106 நாள் செலவழித்தேன் 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஒருசில முதியோர்கள் குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்களும் மருத்துவ பொருட்களும் ஒரு சிலருக்கு பண உதவியும் பெற்றுத்தர முடிந்தது என்னாளும் என் அணியில் உள்ள நண்பர்களும் உதவியாக இருந்த சமூகத்தில் அனைவருக்கும் சொல்ல வேண்டிய கடமை *அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதை செய்திகளில் மூலம் அனுப்புகின்ற போது சுய விளம்பரமும் பெருமையும் உதவி செய்துவிட்டு பலனை எதிர்பார்ப்பது போன்று ஆகிவிடக்கூடாது சமுதாயத்தில் தனிஒருவர் முயற்சித்தால வெற்றி கிடைக்கும் என்பதையும் அது ஒரு மாற்றுத்திறனாளிகள் ஆனாலும் முடியும் என்பதையும் நான் உதாரணமாக இருக்க வேண்டும்

V.Y.வினோத்குமார் B.com தமிழ்இந்தியர் சேவை ஒருங்கிணைப்பாளர்
பம்மல், Chennai – 600075.

செல்: +91 6381317981

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here