டைம்ஸ் & ஆஃப் – இந்தியா நாளிதழ் ஏற்பாடு செய்திருந்த ‘கணித் உத்சவ்’ – கணித வினாடி – வினா போட்டிகள் வடபழனியில் உள்ள சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் சமீபத்தில் நடைபெற்றது. பள்ளிகளுக்கிடையேயான இப்போட்டியில் மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா (இணைப்பு) பள்ளியைச் சார்ந்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் லலித் ஆகாஷ் மற்றும் ஸ்ரீ விஷ்ணு ஆகியோர் முதல் பரிசினையும் ஷ்ரவன் மற்றும் ஆதித்யன் ஆகியோர் மூன்றாம் பரிசினையும் ஆறாம் வகுப்பு மாணவர் லக்ஷ்மி நாராயண் ருத்ரா இரண்டாம் பரிசினையும் பெற்றுச் சாதனை படைத்தனர். மாணவர்களின் தொடர் வெற்றியைப் பள்ளி நிர்வாகம் பாராட்டி ஊக்கப்படுத்தியது.