14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை தமிழகத்தில் நாளை முதல் அமலுக்கு வருகிறது. பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்க மக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாசு இல்லாத அயப்பாக்கத்தை உருவாக்குவோம், பிளாஸ்டிக் மாசை எதிர்க்க கைகள் இணைவோம்! என்ற விழிப்புணர்வு இன்று அயப்பாக்கம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது. அதில் உணவு பொட்டலம் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள், சாப்பிடும் மேசைகளில் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் காகிதம், பிளாஸ்டிக் தெர்மோகோல் பிளேட், பிளாஸ்டிக் காகித தட்டு, பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித கப், பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் டம்பர், பிளாஸ்டிக் தெர்மோகோல் கப், தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் ஸ்ட்ரா, பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், பிளாஸ்டிக் டீ கப், சூடுபடுத்தப்படாத பாலியுரொபைலின் பிளாஸ்டிக் பைகள் ஆகியவை கூறிப்பிடப்பட்டுள்ளது. இப்படிக்கு அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சி, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்.