பொங்கல் திருநாளையொட்டி அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி துவக்கி வைத்தார்

0
609

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் 05.0.01.2019 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி அனைத்து குடும்ப அட்டை தாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழ் குடும்பங்கள் ஆகிய 2 கோடியே 1 லட்சத்து 91 ஆயிரத்து 54 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தலா ஒரு கிலே பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் அங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட திருவாரூர் மாவட்டம் தவிர மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள 1 கோடியே 97 லட்சத்து 98 ஆயிரத்து 102 குடும்பங்களுக்கு 1000 ரூபாயும் வழங்கிடும் அடையாளமாக, 10 குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கி துவக்கி வைத்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here