வள்ளுவர் வாக்கும் பழமொழி அன்றோ!

0
1020

சங்க காலத்தின் மருவிய நிலையில் பதிணெண் கீழ்கணக்கு நூல்கள் எழுதப்பட்டன. அவற்றுள் பழமொழி நானூறு என்பதும் ஒன்று. இதன் ஆசிரியர் முன்னுறை அரையனார் ஆவார். அவர் தமது காலத்தில் வழக்கில் இருந்த 400 பழமொழிகளுக்கு ஏற்றவாறு கருத்துக்களை அமைத்து மக்களின் அறிவு தெளிவு பெறக் கவிதை செய்தார். அறிவு தெளிவு பெறுதல் என்பது எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (திகு 423) என்ற வாக்கிற்கு விளக்கம் தருவதாகும். இக்குறள் அறிவு உடைமை என்ற அதிகாரத்தில் பெய்யப்பட்டிருப்பதை நோக்கத் தக்கது. அது போன்றே எப்பொருள் என்பதை எத்தன்மைத்து எந்த விளைவைத் தரத்ததக்கது. அது எவ்வாறு உருவாக்கம் செய்யப்பட்டது? அப்பொருளைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன ? என்பது போன்ற கேள்விகளை முன்னிறுத்தி விடை காண்பதே அறிவின் அடையாளமாகிறது. இதற்கு நாம் சாக்கரட்டீசை நாட வேண்டிய அவசியம் இல்லை.

நமது அறிதலும் தேவையும் ஒன்றினைந்த சிந்தனையே போதுமான அறிவாகிவிடும். ஆனாலும் அறிவைப் பற்றி வள்ளுவர் விளக்கம் தரும்போது எளிமையான பொருள் தருகிறார். அதாவது நமது அறிவு என்பது நம்மை எப்போதும் எந்தவிடத்தும் நல்ல பயன் தரும் காரியங்களை திட்டமிடுவதாகவும் அதனை செயல்படுத்தும் வழி வகையைக் காட்டுவதாகவும் அமைந்திட வேண்டும் என்பார். இந்த செயல்களை முடித்து தரும் அறிவு சில சமயத்தில் சுய நலம் கொண்டு மற்றவர்களுக்குத் துன்பம் தரும் காரியங்களை அமுல்படுத்தி விடும். இத்தகைய செயல்களை தவறு என்று தள்ளிவிடுகின்ற அறிதலைத் தரும் அறிவு தேவை என்கிறார். இதனையே நன்றின்பால் உய்ப்பது அறிவு என்கிறார்.

அதாவது கண் காது மூக்கு நாக்கு உருப்புகள் செயல் படுத்தத்தான் இயற்கை நமக்குத் தந்திருக்கிறதே தவிற அவை கள்ளுண்ட களித்து மயங்கிக் கிடந்திட அல்ல என்ற அறிதலைப் பெறவேண்டும் என்கிறார். இதனை சென்ற இடத்தால் செலவிடாது என்கிறார். இந்த உடல் பெறும் சுகம் ஒன்றையே குறிக்கோலாய் கொண்டால் அது நம்மை பெண் பித்தனாக மதி கெட்டவனாய் மாய்த்து விடும் என்கிறார். ஆகையால்தான் மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் என்கிறார். அப்படிப் போனால் நமக்கு எதிர்காலம் என்பது துன்பம் தருவதாக அமைந்து விடும் என்கிறார். எனவே தீமை தரும் செயல்பாடுகளை தவிர்த்து விட வேண்டும் என்கிறார். இதனை தீது ஒரீஇ என்பார். அதாவது அறிவின் வேலை என்பது நம்மை நமக்கும் பிறர்க்கும் பயன் தரும் வேலைகளை ஒவ்வொரு நாளும் செய்து கொண்டே இருந்திட பணித்தல் வேண்டும் என்கிறார். இதனையே சென்ற இடத்தால் செலவிடாது தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு (திகு 422) என்கிறார்.

ஆனால் இப்படிப்பட்ட வாழ்க்கைப் பயணம் என்பது கல்லும் முள்ளும் கொண்ட கடினமான பாதைதான். இருப்பினும் முயற்சி திருவினையாக்கும் என்பது வள்ளுவர் வாக்கு. ஆனால் இந்த உலகம் கடவுள் இருக்கிறான் அவன் சோறு போடுவான் என்கிறது. வள்ளுவரோ உழைத்தால் உயரலாம் என்கிறார். உழைக்காமல் உட்கார்ந்து விட்டால் பசி உனது வயிற்றைக் கிள்ளும் என்கிறார். கடவுள் சோறு போடமாட்டான் என்கிறார். இந்தக் கருத்தினையே பழமொழி நானூறு கவிதையும் வலியுறுத்துகிறது. சோம்பலை ஒழித்து உழைத்து பணம் சம்பாதித்து வாழ்வில் உயர்வடை என்கிறது. அப்போது நீ எதிர்படும் இன்னல்களும் துன்பமும் தோல்வியும் விதியினால் வந்தது என்று துவண்டு போகாதே. முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்கிறது.

தெய்வம் நமக்குத் தோல்வி தந்து விட்டது நம்மைப் படைக்கும்போதே தலையில் எழுதிவிட்டான் என்ற கருத்திக்களில் கவணம் வைக்காதே என்கிறது. இதனையே முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று & தொழுதிருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல் & என்று கேள்வி எழுப்புகிறது அந்தக் கவிதை. நாம் எதிர் கொள்கின்ற அல்லல்தான் துன்பம் துடைக்கும் கருவியாக உரு மாற்றம் பெறுகிறது. எத்தனையோ சென்னை வாசிகள் வீட்டு உரிமையாளர்களின் தொந்தரவினால் எப்படியாவது சொந்த வீடு வாங்கி விடவேண்டும் என்ற வைராக்கியம் பெறுவர். இந்த தொந்தரவு என்பது அவனது முன்னேற்றத்திற்கு படிகல்லாகிறது. இதனையே இழுகினானாக காப்பது இல்லையே – முன்னம் எழுதினான் ஓலை பழுது (பமொநா பாடல் எண் 161)  என்ற பழமொழியைச் சொல்லி விளங்க வைக்கிறார். இதன் பொருள் கவிதை எழுதுகின்ற கவிஞர்கள் தமது கவிதையில் தவறான வார்த்தைகள் தவறி வந்து விட்டால், அதனை அறிந்த மாத்திரத்தில் திருத்தி சரி செய்திடுவர் என்ற உண்மையை கையாண்டுள்ளார்.

ஆனால் உனது நம்பிக்கையோ கடவுள் தவறு செய்து விட்டான் நான் என்ன செய்வேன் என்று நம்புவதாய் அமைந்து விட்டதே என்று வேதனைப் படுகிறார். அப்படி நீ நம்புவது உண்மையானால் கவிஞன் தனது பாடலை திருத்தி அமைத்திடும்போது சர்வ வல்லமை படைத்த கடவுள் உன்னை மாற்றி அ¬த்திட அல்லது திருத்தியமைத்திட தயங்குவதேன் என்கிறார். அண்ணன் தம்பிகள் தாத்தா மாமாக்கள் சண்டையிட்டு மடிந்திட கீதையைத் தருகின்ற ஓர் கடவுள் உண்மையான கடவுள் என்று நாம் நம்பி மோசம் போக வேண்டாம் என்ற அறிதலைத் தருகிறது. கீதை தரும் கருத்துக்கள் மனிதனை மடயர்களாக்கும் என்கிறது இப்பாடல்.

வள்ளுவரது கருத்துக்கள் அவனை அறிவாளியாக பொருளாதார மேம்பாடு கொண்டவனாக நல்ல குடும்பஸ்தனாக மாற்றியமைக்கும். அவன் நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று செம்மாந்து வாழ்வான். முயற்சி திரு வினையாக்கும். அதவாது நமது உழைப்பு நமக்கு பணம் தரும் உழைப்பு. அது மற்றவர்களுக்கு நலம் பயக்கும் உழைப்பு. குறள் அறிவோம்.

ஆக்கியோன் – பாவலர் சீனி.பழநி பிஏ,
இணைச் செயலர், அண்ணா நகர் தமிழ்ப் பேரவை.
தொடர்புக்கு கை பேசி 9940693986.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here