ஊட்டச்சத்துள்ள வீட்டுத்தோட்டம் அமைத்தல் மற்றும் காளான் வளர்ப்பு பயிற்சி

0
827

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வரும் வியாழக்கிழமை 03.01.2019 அன்று ஊட்டச்சத்துள்ள வீட்டுத்தோட்டம் அமைத்தல் பயிற்சியும், திங்கட்கிழமை 07.01.2019 அன்று காளான் வளர்ப்பு பயிற்சிகள் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியானது நகரவாசிகள், மகிளர், மாணவர்கள், சுய உதவிக் குழுக்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் நல்ல வாய்ப்பாக அமையும். இப்பயிற்சியில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044&26263484 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிற்சி காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணிவரை நடைபெறும். பயிற்சி பற்றிய குறிப்பேடு, கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.