கேகேஆர் & டிகேஆர் அணிகளின் முதன்மை ஸ்பான்சர் ஆனது மொபைல் பிரீமியர் லீக் (MPL)

0
373

சென்னை : இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரானிக் ஸ்போர்ட்ஸ் மற்றும் மொபைல் கேமிங் தளமான மொபைல் பிரீமியர் லீக் (MPL) மற்றும் நைட் ரைடர்ஸ் இரண்டும் இணைந்து, அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளன. அதில், ஐபிஎல் மற்றும் சிபிஎல் போட்டிகளில் நைட் ரைடர்ஸ் உரிமம் வகிக்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) மற்றும் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் (TKR) அணிகளின் முதன்மையான ஸ்பான்சர் அந்தஸ்தை எம்பிஎல் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி நைட் ரைடர்ஸ் தலைமை நிர்வாக அலுவலர் & நிர்வாக இயக்குனர் வெங்கி மைசூர் (Venky Mysore, CEO & MD, Knight Riders) கூறுகையில், “இளமையும் படைப்புத்திறனுமிக்க இளைய தலைமுறையால் நடத்தப்படும், இஸ்போர்ட்ஸ் மற்றும் கேமிங் துறையில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துவரும், துடிப்புமிக்க இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனமான எம்பிஎல் உடன் கூட்டாளராக இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம். ஐபிஎல் போட்டியில் கேகேஆர் அணியோடும், சிபிஎல் போட்டியில் டிகேஆர் அணியோடும் இணைவதன் மூலமாக, எங்களது கூட்டு சமூகமயமாக்கப்பட்டு செயல்படுத்தப்பட புதிய வாய்ப்புகள் உருவாகும்” என்று தெரிவித்தார்.

இது குறித்து எம்பிஎல் நிறுவன வளர்ச்சி மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு துணைத்தலைவர் அபிஷேக் மாதவன் (Abhishek Madhavan, VP, Growth and Marketing, MPL) பேசுகையில், “கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முதன்மை ஸ்பான்சர் ஆவதில் மகிழ்ச்சியடைகிறோம். ஐபிஎல் தொடங்கப்பட்டதில் இருந்தே தனக்கென்று தனிப்பெயரைக் கொண்டிருக்கும் அந்த அணி இரண்டு முறை ஐபிஎல் சாம்பியன்ஷிப்பை வென்றிருக்கிறது. அந்த அணியில் சில நட்சத்திர வீரர்கள் உள்ளனர், அதோடு அந்த அணி வெற்றிக்காகப் போராடும் தன்மை வாய்ந்தது. எம்பிஎல்லும் அப்படிப்பட்டது தான். அதனால், இந்த இரண்டும் ஒன்றாக இணைவது எங்களது பிராண்ட் அதிக பயனர்களைப் பெற உதவும். சிபிஎல் சாம்பியன்ஷிப்பை மூன்று முறை வென்றிருக்கும் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி பலமிக்க அணிகளுள் ஒன்றாகும். நைட் ரைடர்ஸின் நிர்வாகத்துக்கு உட்பட்ட இந்த அணியோடு இணைவது சர்வதேச விளையாட்டரங்கில் எம்பிஎல் நுழைய வழி வகுக்கும்” என்று தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 தொடங்கி செப்டம்பர் 10ஆம் தேதி வரை, ட்ரினிடாட்டில் சிபிஎல் போட்டி நடைபெறும் என்று அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இப்போட்டியில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் 5 அணிகள் பங்கேற்கின்றன.

ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில், இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடன் 7 அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டி வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

எம்பிஎல் பற்றி:
2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எம்பிஎல், இந்தியாவின் மிகப்பெரிய இஸ்போர்ட்ஸ் மற்றும் மொபைல் கேமிங் (esports and mobile gaming) தளமாக உள்ளது. இது, 45 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளது. இதில், தற்போது உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் (WCC) உட்பட 50க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இருக்கின்றன. எம்பிஎல் உடன் பல்வேறு கேமிங் ஸ்டூடியோக்கள், கேம் டெவலப்பர்கள் கூட்டு சேர்ந்திருப்பதால், அவர்களது படைப்புகள் இந்த தளத்தில் வெளியிடப்படுகின்றன. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இரண்டு வகை மொபைல்களிலும் எம்பிஎல் செயலி செயல்படும். சாய் ஸ்ரீனிவாஸ், சுப் மல்ஹோத்ரா இருவரும் இணைந்து இந்த நிறுவனத்தைத் தொடங்கினர். இருவரும் இணை நிறுவனர்களாக இருந்த க்ரியோ எனும் மொபைல் போன் ஸ்டார்ட்அப் நிறுவனம் பின்னர் இவர்களால் வாங்கப்பட்டது. தற்போது இந்தியா மற்றும் இந்தோனேஷியாவில் செயல்பட்டு வரும் எம்பிஎல் பெங்களூர், ஜகார்த்தா, புனே ஆகிய நகரங்களில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் 300க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

நைட் ரைடர்ஸ் பற்றி:
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஒரு முதன்மையான உலகளாவிய பிராண்டாக விளங்குகிறது நைட் ரைடர்ஸ். இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கரீபியன் பிரீமியர் லீக்கில் (சிபிஎல்) ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் என்று இரண்டு அணிகளின் உரிமையாளராக இருந்தாலும், சம்பந்தப்பட்ட சந்தைகளில் முன்னணி பிராண்ட் ஆக நைட் ரைடர்ஸ் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. ஐபிஎல் சாம்பியன்ஷிப்பை இரண்டு முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸும் சிபிஎல் சாம்பியன்ஷிப்பை டிகேஆர் மூன்று முறையும் வென்றிருப்பதன் மூலமாக, இரண்டு அணிகளும் மிக வெற்றிகரமானதாகத் திகழ்கின்றன. இதனால், கிரிக்கெட் தொடர்பான தளங்களில் மிகப்பெரிய பிராண்ட்களில் ஒன்றாகவும், தனது ரசிகர்கள் மத்தியில் மதிப்புமிக்க ஒன்றாகவும் நைட் ரைடர்ஸ் இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here