தெய்வத்தான் ஆகாது. எனினும் மனிதனால் ஆகும்

0
994

திருவள்ளுவர் மனிதன் தெய்வத்தின் நினைவால் தன்னை மறந்து தனது நிலைமை மறந்து முட்டாள்களின் கால்களில் விழுந்து கை கட்டி வாய் பொத்தி நிற்கும் அவலத்தினைக் கண்டு கொதித்து எழுந்தார். மனிதா உனது நம்பிக்கை தவறு என்றார். உனது வாழ்வும் பயனும் உனது கையில்தான் உள்ளதே தவிற வேறு ஒருவனது கையில் இல்லை என்றார். அவ்வகையான ஒன்று நீ உன் மீது கொள்கின்ற நம்பிக்கையும் முயற்சியும் என்றார்.

நம்பிக்கை என்பது நாம் நமது தேவைகளை நமது உழைப்பினால் பெற்றிட இயலும் என்ற உண்மையறிதலாகும். இதனையே ஆங்கிலத்தில் கோல் செட்டிங் என்பார்கள். அது போன்றே செல்ஃப் அஃபர்மேஷன் என்ற சுய சிந்தனையையும் போதிப்பார்கள். அதாவது இறைவன் கையில் நமது நம்பிக்கையையும் தேவைகளையும் அடகு வைத்தல் ஆகாது என்கிறார் பெரியார். காரணம் மனித முயற்சி ஒன்றே அவனது வாழ்விற்கு வழிகாட்டியாகும். அதாவது கடவுளை காணும் முயற்சி அல்லது கடவுளை நம்பி வாழும் வாழ்க்கை மனிதப் பிறவியை வீனாக மாய்த்திடும் முயற்சியாகும் என்கிறார்.

இருப்பினும் முட்டாள்கள் காவி உடையிலும் கருப்பு உடையிலும் குழுமி இருக்கும் இடங்களின் இவனைப் போன்ற ஒரு பெரிய முட்டாள் கபட வேடம் கொண்டு அவர்களது தலைவனாகிறான் குருநாதனாகிறான். இப்போது இந்த முட்டாள்கள் கூட்டம் தமது வாழ்வின் உன்னத குறிக்கோள் மறந்து கடவுளை நினைந்து கையில் உள்ள பொருளையும் கிடைத்தற்கரிய நேரத்தையும் இழந்து கபட வேடர்களின் காலில் விழுந்து நிற்கின்றனர். இப்போது இவர்கள் ஆணவம் அழிந்து நிற்கும் உத்தமர்கள் என்று ஆன்மிகம் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறது.

ஆனால் வள்ளுவரது வாக்கோ தெய்வத்தால் ஆகாது என்பதை அறிவாய் மனிதா என்கிறது. உனது முயற்சியே உன’கு உதவிடும் உத்தம நண்பன் என்பதை அறிவாய் என்றது. உனது முயற்சியும் உனது குறிக்கோளும் அடையும் பயனும் பெறுகின்ற பயனும் குறித்து கேட்டபோது அவர் கூறிய சொற்கள் என்றும் போற்றத் தக்கவை. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் (திகு 619) என்பதே அத்தகைய அறிவுரை. அதாவது உழைத்து பெறுகின்ற ஊதியம் இருக்கிறதே அதுதான் உனக்கு பெருமை தரும் என்கிறார்.

இன்னும் சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இறைவனிடம் கையேந்தி நிற்கும் நிலைமையை மனிதன் ஏன் அடைய வேண்டும் என்கிறார். உனக்கு வேண்டிய தேவையனைத்தும் உனது முயற்சி மற்றும் உழைப்பின் வழியே பெற்று வருகிறாய் என்பதை மறவாதே என்கிறார். உண்மையில் கடவுளை நம்புகின்ற மனிதனை வைத்துப் பிழைக்கும் வேடதாரிகளின் முயற்சியும் உழைப்பும் ஏமாற்று வேலையும் அவர்களுக்கு ஊதியம் தருவதை நீ அறிய மாட்டாயா என்று ஏங்குகிறார் பெரியார். பொருளையும் நேரத்தையும் அறிவையும் பறிக்கின்ற இறைவனும் இறை நம்பிக்கையும் என்றுமே உனக்கு உதவிட வேண்டாம் என்கிறார்.

முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் நம்பு என்கிறார். வேட்டை விலங்காய் திரிந்த மனிதன் தந்த அன்றைய ஆயுதங்களை கையில் ஏந்தி இன்றும் நம்மை காக்கிறேன் என்று எந்த தெய்வமும் கூறியதில்லை என்பதை நாம் அறிந்திட வேண்டும். இன்றைய அணு யுகம் சங்கு சக்கரம் மான் மழு என்ற அணைத்தையும் அழித்து விடும். இத்தகைய அறிவு கடவுள் தந்தது அன்று. கல்வுயும் கல்விக் கூடங்களும் ஆசிரியர்களும் தந்தவை என்பதை மறந்து விட’கூடாது என்கிறார். எனவேதான் முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்திவிடும் (திகு 616) என்றார்.

அதாவது மனிதா உனது துன்பத்திற்கும் ஏழ்மைக்கும் காரணம் நீ சரியான முயற்சியும் அறிவும் கொள்ள வில்லை. முயலாத மனிதனு’குத் துன்பம் தானாக வந்து சேரும். கடவுளை வணங்குவதால் கடவுள் வந்து உனக்கு உணவளிக்க மாட்டான் என்கிறார். கடவுளையும் மதத்தையும் நம்பி வாழ்ந்த நமது தாத்தா பாட்டிகள் எவ்வாறு தீண்டாத் தகாதவர்களாக ஆடை அணிந்திட உரிமையற்றவர்களாக பள்ளிக்கூடம் செல்லவும் மறுக்கப்பட்டவர்களாக வேதனைகளை ஏற்றிருந்தார்கள் என்பதை சிந்திப்போம். எனவே மனிதன் காசு பணம் சம்பாதித்திட வேண்டும். அது போன்றே தனது முயற்சியிலும் தனது வளர்ச்சியிலும் குறியாக இருந்திட வேண்டும் என்கிறார் பெரியார்.

எனவேதான் சாக்கரட்டீஸ் போன்றோர் அனைத்தையும் கேள்விப் பொருளாகப் பார் என்றார். அப்போது உனது அறிவும் அறிதலும் உனது முயற்சியால் விளைகின்ற பயிர் என்பதை அறிவாய் என்றார். மதம் மனிதனை மாய்த்துவிடும் என்பதை இன்று நாம் கண் கூடாகப் பார்த்து வருகிறோம். அறிவு பெறுவோம். அறிதலைப் பெறுவோம். வள்ளுவம் அறிவோம்.

ஆக்கியோன்
பாவலர் சீனி பழநி பிஏ,
இணைச் செயலர், அண்ணா நகர் தமிழ்ப் பேரவை.
தொடர்புக்கு கை பேசி 9940693986.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here