மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி

0
732

ஒரு காலத்தில் காடும் நாடும் இரு வேறு அரசாங்கத்தினைக் கொண்டிருந்தது. காட்டிற்கு தலைவன் சிங்கம் என்றும் நாட்டிற்குத் தலைவன் மன்னன் என்றும் அறியப்பட்டனர். அதாவது காட்டில் வாழ்வது மிருகம். ஆனால் நாட்டில் வாழ்வதோ மனித இனம். இரண்டும் இரு வேறு வாழ்வியலை’ கொண்டிருக்கிறது. இயற்கையும் இவர்களின் தேவைக்கேற்ப இரண்டு கூறுகளாக பிரிந்து கிடக்கின்றன. அதாவது வள்ளுவர் காலத்தில் மேற்கண்டவாறு நிலமும் காடும் காணப்பட்டது. காட்டிற்குச் சொந்தக்காரர்கள் தமது எல்லையைத் தாண்ட மாட்டார்கள். ஆனால் நாட்டிற்குச் சொந்தக்காரர்கள் இன்று காடுகளையும் தமதாக்கிக் கொண்டு விட்டனர். இருப்பினும் வள்ளுவர் காலத்து சமுதாக் காட்சியைக் இங்கு காண்போம். அன்று வாழ்ந்த இனக்குழு சமுதாயம் சற்றே விரிவடைந்த நிலையில் ஒரு தலைவன் அவர்களை வழி நடத்தி வந்துள்ளான்.

காலப்போக்கில் ஒரு இடத்தில் நிலையாக வாழ்ந்தபோது சில கட்டுப்பாடுகளும் வாழ்வியல் கோட்பாடுகளும் கைகொள்ளப்பட்டன. இந்த கோட்பாடுகள் மீறாமல் ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டும் என்பது அன்றைய அறப்பன்பாடாகியது. அந்நிலையில் மன்னனும் நாடும் கொடியும் கோலும் குடியும் நீதியும் வழுவும் வழக்கிற்கு வந்தன. மன்னன் சொல் கேட்டு மக்கள் நடந்தனர். காரணம் அவன் மக்களின் காவலன். மக்கள் நலனைப் பேணும் இறைவன். உண்மையில் மக்கள் அனைவரும் மன்னனின் ஆணைக்கு கட்டுப்பட்டனர். காரணமு அவனது சொல்லும் செயலும் ம’களின் நலன் காத்திடும் என்பதில் இருவரு’குமே ஐயம் எழுந்ததில்லை. இதனையே வள்ளுவரும் மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி என்றார்.

குடி என்றால் அரசன் கோலோச்சும் நாட்டில் வாழும் ம’கள் ஆகும். ஆனால் வள்ளுவர் கூறுவது சற்றே வியப்பாக உள்ளது. அவர் கூறுவார் குடி என்றால் வான் நோ’கி வாழும் உலகம் என்பார். அதாவது வானத்து மழை நீரையும் உயிர் நல்கும் காற்றினையும் வழி காட்டும் ஒளியினையும் இன்ன பிறவும் தன்னகத்«க் கொண்டுள்ள ஆகாயத்தினை துணை கொண்ட மண்ணுலகம் என்பார். அதாவது இந்த உலகத்து மக்கள் அனைவரும் அரசனின் ஆணையின் படி வாழ்வினை அமைத்துக் கொள்வர் என்பார். காரணம் ம’களின் தேவை அன்றாட உணவும் உறையுளும் உடையும் பொருளும் பிறவும் தடையின்றி கிடைத்திட வழி வகை செய்வது அரசாட்சி ஆகும். இதனையே வள்ளுவர் வேறு வார்த்தையில் காட்சிப் படுத்துவார்.

குடிதழீஇ கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு (திகு 544) என்பார். அதாவது மக்களின் நலனை முன்னிறுத்தி ஆட்சி செலுத்தும் மன்னனை மக்கள் நேசிப்பர் என்பது இன்றைய பொருள் தரும் குறள். குடி தழீ என்பதற்கு ம’களின் தேவையறிந்து அன்புடன் நடந்திடும் ஆட்சியாளர்களைக் குறிக்கிறது. இன்றைய ஆட்சியாளர் என்போர் அதிகாரிகளாக காவல் துறை என்றும், தாசில்தார் மாவட்ட ஆட்சியர் என்று பலதரப்பட்ட தளங்களில் இயக்கம் கொண்டுள்ளனர். அவர்கள் மக்கள் நலம் காக்கும் பண்பினைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பது வள்ளுவரின் எதிர் பார்ப்பாகும். வள்ளுவம் காப்போம்.

விளக்கம் – பாவலர் சீனி.பழநி, பி ஏ ,

அண்ணாநகர் தமிழ்ப் பேரவைத் துணைச் செயலாளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here