வாழ்வில் வளர்ச்சி வேண்டும்

0
847

வளர்ச்சி என்பது உடல் வளர்ச்சி. மன வளர்ச்சி. அறிவில் முதிர்ச்சி. அறிதலில் ஆர்வம். கல்வியில் பெருமை. பொருளாதார மேன்மை. குடும்பத்தா£ர்களின் வாழ்வில் உயர்வு. சமுதாயத்தில் மதிக்கப்படுதல். என்று இப்படிப்பட்ட பல்வேறு விதமாக மனித வளர்ச்சி அறியப்படுகிறது. இத்தகைய வளர்ச்சியால்தான் மனிதன் மதிக்கப்படுகின்றான். இவை ஒரு தனி மனிதனின் முயற்சியில் விளைகின்ற விளைவாய் உள்ளது.

இத்தகைய விளைவுக்கு குடும்பத் தலைவன் நல்ல வேளாளானாக பாடுபட வேண்டியது அவசியமாகிறது. பிள்ளைப் பேறு முதல் அந்தக் குழந்தையை வளர்த்து பெரியோனாக வளர்த்து விட்டால் போதாது, அதற்கு அப்பாலும் அவர்கள் மூலமாய் நல்ல பல பேரக்குழந்தைகளை காப்பது என்று அவனது கடமை முதுமையிலும் தொடர்கிறது. இப்படி இவனது முயற்சி தளராது இருக்கும்போது அந்தக் குடும்பமு ஆல் போல் வளர்ந்து அருகு போல் வேர் விட்டு நிற்கிறது. தனி மனிதனாய் இந்த மண்ணில் மலர்ந்தவன் தனது உழைப்பால் உயர்ந்து நிற்கிறான். ஒரு பெரிய ஆல மரமாய் எண்ணற்ற பறவைகள் அறிந்து மகிழும் இருப்பிடமாய் இருக்கிறான்.

இந்த நெடிய பயணத்தில் எண்ணற்ற துன்பங்களும் சோதனைகளும் வேதனைகளும் இழப்புகளும் அவனை முடக்கிட முயற்சித்திருக்கும். இருப்பினும் அவனது தளராத உள்ளத்தில் எழுகின்ற ஊக்கம் அவனை இந்த உயர்ந்த நிலையில் கொண்டு சேர்த்திட தவறவில்லை. எடுத்துக்காட்டாக இன்றைய சாதாரண செல்வந்தர்களது நிலையை உற்றுப் பாருங்கள். அவர்கள் அனைவதும் இந்த மண்ணில் 1970க்கு முன்பாக ஏதுமற்றவர்களாய்த்தான் வாழ்ந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் இன்று பெரிய நிறுவனத்திற்கு சொந்தக்காரர்களாய் இருப்போரை நாம் அறிவோம். அதற்குப் பின்புலம் அவரது உழைப்பு. சிறுது நேர்மையும் சேர்ந்த முயற்சியும் உழைப்பும் அவர்களைச் சார்ந்தோரையும் வாழ்ந்திடச் செய்யும். நேற்றைய அவர்களது உழைப்பு இன்று அவர்களையும் அவர்களைச் சார்ந்தோரையும் வாழச் செய்கிறது.

இதனை வள்ளுவர் வேறு விதமாகக் கூறுகிறார். மனிதா அப்படிப்பட்டவர்களின் உள்ளம் இருக்கிறதே அது அன்பை தன்னிடத்தில் தத்தெடுத்து வளர்த்து வருகிறது. இப்படிப்பட்ட அன்பைத்தான் குடியென்னும் குன்றா விளக்கு என்பார் பிரிதோரிடத்தில். குடி என்றால் அவனைச் சார்ந்தோர். அவர்கள் நன்கு வாழ்ந்திட வேண்டும் என்ற கடமை உணர்வு அவனை வழி நடத்தும் குன்றா விளக்காகிறதாம். அப்படிப்பட்டவர்களு’குத் தெரிந்தது துன்பம் என்ற ஒன்றிற்கு தான் ஒரு ஜீவன் துவண்டு போனால் தன்னை நம்பி வாழும் மனைவி மக்கள் சமுதாயம் என்ற ஒரு மனிதத் தொகுப்பு வாடி வதங்கி விடும் என்பது. எனவே அப்படிப்பட்டோர் தான் வெளியில் சிரித்து உள்ளத்தில் ஓயாது உழைக்கும் உபாயம் அறிந்து வாழ்கிறார்கள் என்கிறார். இத்தகைய வழியும் உபாயமும்தான் அவனது அறிவும் அறிதலாகவும் உள்ளது.

இந்த நிலையில் அவனை எதிர்த்து நிற்கும் இன்னல்கள் காட்டாற்று வெள்ளம் போல் வந்தபோதும் அதனையும் கடந்திட வழி காண்கிறான். வழி மட்டும் காண்கிறான் இல்லை. அதனை செயல்படுத்தும் உள்ளத்தில் ஒளிந்துள்ள ஊக்கத்தினையும் மீட்டெடு’கிறான். வெற்றியாளன் ஆகிறான். மனிதா அப்படிப்பட்ட உழைக்கும் உள்ளத்தினை பெற்றுக் கொள் என்கிறார் பெரியார். தோல்வி கண்டு வீட்டில் முடங்கி விடாதே என்கிறார். வெளியே வா. இந்த உலகம் உன்னுடையது என்கிறார். இன்று எந்த வேலை வேண்டுமானாலும் நீ செய்து பணம் பார்க்கலாம். தேர்வு உன் கையில் என்கிறார் பெரியார். இதனை வெள்ளத்து அனைய இடும்பை அறிவு உடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் (திகு 622) என்கிறார்.

இடும்பை என்றால் துன்பம் அல்லது தோல்வி என்று பொருள். அதாவது அவன் உழைத்திட துணியும்போது அவனது ஏழ்மையும் இல்லாமையும் இல்லாமல் போகிறது. இதனையே ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றி தாழாது உஞற்றுபவர் (திகு 620) என்றார். உஞற்றுதல் என்ற வார்த்தையை உச்சரிப்பதற்குக் கூட சற்றே கடினமாக இருத்தலைப் பாருங்கள். இதன் பொருளும் சற்றே கடினமானதுதான். அதுதான் கஷ்டப்பட்டு கண்விழித்து பாடுபட்டு உழைத்து பணம் சேர்ப்பது.

சும்மா இருந்தால் எதிர்காலத்து சுகத்தினை இப்போது பெற்றிட முடியாது. இன்றைய வேர்வை நாளைய சுகம். காசுதான் காக்கும் கடவுள். கடவுளின் பெயரால் காசினை இழந்து நிற்க வேண்டாம். தன் கையே தனக்கு உதவி என்ற நம்பிக்கை வந்து விட்டால் இந்த மனிதன் கடவுளிடம் அல்லது வேறு நபர்களிடம் கையேந்திகளாக வாழ வேண்டிய அவசியம் இல்லை என்ற அறிதல் தருவது திருக்குறள்.

இப்படிப்பட்டவர்கள்தாம் கையில் உள்ள காசினை கோயில் உண்டியில் போடுவதை விட பசித்திருக்கும் ஏழைக்கு உணவிடுவான். அற்றார் அழிபசி தீர்த்தல் ஒருவன் பெற்றான் பொருள் வைப்புழி என்ற உயர் குறள் அறிந்தவன் அவனே. அப்படிப்பட்டவர்களுக்கே பிறக்க இருக்கும் நாளைய நாட்கள் சொந்தமாகும். வேறு வார்த்தையில் கூற வேண்டும் என்றால் நம் கையில் இருக்கும் காசினையும் நல்ல காலத்தினையும் ஒட்டு மொத்தமாக பறித்து மகிழ்வது இன்றைய கடவுளும் கடவுளைக் காட்டும் மனிதர்களுமாக உள்ளனர். கடவுளைக் காட்டுவதற்கும் காசு கேட்கும் கயமையை ஊட்டிவிட்டது இன்றைய பக்தி மார்க்கம் என்பதை அறிவோம். உழைப்பே உயர்வு தரும் என்பது வள்ளுவம். நல்ல அறிதலைப் பெறுவோம். குறள் அறிவோம்.

ஆக்கியோன் – பாவலர் சீனி.பழநி பிஏ,
இணைச் செயலர், அண்ணா நகர் தமிழ்ப் பேரவை.
தொடர்புக்கு கை பேசி 9940693986.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here