வினைக்குறை தீர்ந்தார்

0
785

வள்ளுவரின் கண்களில் இந்த உலகம் மனிதனின் அன்றாட வினையாற்றலுக்காக ஏங்கி நிற்கிறது. அதாவது உலகில் வினைக்குறை என்பது நாளும் இருந்த வண்ணம் உள்ளது. அதாவது ஒரு வேலையைச் செய்து முடித்த உடன் இந்த உலகம் அப்பாடா போதும் என்று ஓய்ந்து உட்கார்ந்து விடுவதில்லை. அப்போதும் வேறு ஏதோ ஒரு பணியினை அல்லது வினையினை மனிதன் செய்வதற்கு முனைந்திட வேண்டும் என்கிறார். எத்தகைய ஆழ்ந்த அறிதலைப் பாருங்கள். அதாவது உலகத்தில் விடியலாகின்ற ஒவ்வொரு நாளும் முன்னேற்றப் பாதையில் முனைப்புடன் நமது அடிகளை எடுத்து வைத்திட வேண்டும். இதுவே இயற்கையின் நியது என்கிறார் பெரியார். அந்த நியதியை புறக்கணிக்கின்ற மனிதனை இந்த உலகமும் புறம் தள்ளி ஓரம் கட்டிவிடும் என்கிறார். இதனை வேறு வார்த்தையில் வள்ளுவர் வினைக்கண் வினை கெடல் ஓம்பல் என்கிறார். ஓம்பல் என்பது எதிர்மறையான பொருள் தரும் வார்த்தை. மனிதன் உழைக்கின்றான். ஆனால் அவனது உழைப்பு வீணாகும்போது அதனால் யாருக்கு என்ன பயன் -? அதாவது அத்தகைய வீன் உழைப்பு ஒருவனது காலத்தையும் கடின உழைப்பினையும் மூலதனத்தினையும் பாழ் செய்து விடுகிறது. எனவேதான் உனது வினை என்ற தொடர் செயலில் உழைப்பும் காலமும் பிறவும் பயன் தருமாறு மாற்றுருவம் பெறட்டும் என்கிறார்.

இதனையே வினைக்கண் வினைக் கெடல் செய்கின்ற செயல்களை அல்லது காரணிகளை அறிந்து களைந்து விடுங்கள் என்கிறார். அப்படி செய்வது மனிதக் கடமை என்பதனை வள்ளுவரது வாக்கு அறிவுறுத்துகிறது. அதுவே அப்படி பலன் தந்திடாத செயல்களில் ஒருவன் ஈடுபட்டால் அவனை உலகம் ஒதுக்கித் தள்ளும் என்கிறார் பெருந்தகை. இன்றைய அலுவலக ஊழியர்கள் நேர்மையும் திறமையும் அற்றவர்களாக உள்ளபோது அவர்களை அதிகாரிகள் ஒதுக்கி ஓரம் கட்டுவதைப் பார்க்கின்றோம். உண்மையில் நேர்மையும் அறிவும் ஆற்றலும் உள்ளோரை உலகம் கை விடாது. அத்தகைய உண்மையான உழைக்கும் வர்க்கத்தினரைப் பார்த்தால் அவர்கள் கீழ் மட்ட ஊழியர்களாக இருப்பினும் அவர்கள் தலை நிமிர்ந்து பணியாற்றுவதை நாம் இன்றும் காணலாம். இந்த உயர்ந்த பணியை தாளாண்மை என்பார் பெரியார். அதாவது உயர்ந்த கொள்கை என்பார். உண்மையும் நேர்மையும் உழைப்பும் தாளாண்மை என்ற தாய் மடி சுரந்திடும் பால். அது தரும் விளைபொருள் என்ற உயர்வினையே வள்ளுவர் வேளாண்மை என்று விளைந்து நிற்கும் கதிர் காட்டுவார்.

தாளாண்மை என்றும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு (திகு 613) என்பார். அத்தகையோர்க்கு தெரியாத குறள் & வினைக்கண் வினைக் கெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரில் தீர்ந்தன்று உலகு (திகு 612) என்பது. அதாவது அவர்களிடம் அத்தகைய பயன்பாடு நல்கும் செருக்கு இருந்திடாது என்கிறார். உழைப்பில் நேர்மை உயர்வதில் ஊ’கம் செரு’குடன் இருந்திட வழி வகுப்பதை வேளாண்மை என்ற தளராத முயற்சியின் மூலம் காட்சிப் படுத்துகிறார். இரு வேறு நிலையை இந்த இரண்டு குறள்களும் தருவதை நாம் காண முடிகிறது. வள்ளுவம் அறிவோம். . விளக்கம் & பாவலர் சீனி.பழநி, பி ஏ , அண்ணாநகர் தமிழ்ப் பேரவைத் துணைச் செயலாளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here